முதுகுவலியால் அவதிப்படும் தீபிகா படுகோன் – கவலையில் ரசிகர்கள்!

நடிகை தீபிகா படுகோனேவுக்கு தீராத முதுகுவலி இருந்து வந்ததால் தற்போது நடித்து வந்த படப்படிப்பை ரத்து செய்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் தொடர்ச்சியான படப்பிடிப்பால் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இவர் கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘பத்மாவத்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே இவருக்கு முதுகுவலி இருந்ததை இவர் கவனிக்கவில்லை. தற்போது வலி அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே தற்போது விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருவதால், தீபிகா படுகோனேவுக்கு முதுகுவலி அதிகமாகியுள்ளது. எனவே, படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார் தீபிகா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]