முதல் முறையாக தனது காதல் பற்றி பேசிய அனிருத் – காதலி பற்றி என்ன சொன்னார்?

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் ரஜினி, விஜய், அஜித் என பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவரது இசையில் கடைசியாக ரஜினியின் பேட்ட பட பாடல்கள் வந்தது. இவர் யாரையோ காதலிக்கிறார் என்று பேச்சுகள் வருகிறது.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் அனிருத்திடம், யாரையாவது காதலிக்கிறீர்களா, அந்த பெண் யார் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், ரொம்ப நாளாகவே சிங்கிளாக தான் இருக்கிறேன், இசையமைப்பாளராக ஆவதற்கு முன் காதலித்தேன்.

இப்போது உள்ள வேலையில் காதலிப்பது என்பது சரியாக இருக்காது, அதற்காக இப்படியே இருக்க மாட்டேன், காதல் வரலாம் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]