முதல் தர கிரிக்கெட்டிலிருந்து சங்கா ஓய்வு

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

15 ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்கிய குமார் சங்ககார சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 134 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்ககாரா, 12400 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சங்ககார தலைமையிலான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி 2007, 2011ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண இறுதிப் போட்டிவரை சென்றது. ஓய்வை அடுத்து சங்ககார உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள தொடர் உடன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சங்ககார கூறுகையில், கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற விளையாட்டு வீரர்கள் எல்லோருக்கு ஓய்வு நேரம் என்பது கண்டிப்பாக உண்டு. அவர்கள் நிச்சியம் வெளியேறியே ஆகவேண்டும். நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிய இருந்து வந்துள்ளேன். நான் முழு அளவில் விளையாடியுள்ளேன். ஆனால், விளையாட்டு வெளியேயும் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது என்றார்.

அக்டோபர் மாதத்துடன் சங்ககாராவுக்கு 40 வயது நிறைவடைய உள்ள நிலையில், அவர் இந்த முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]