முதல்முறையாக இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமிழ் பெண்மணி

பி எஸ் எம் சார்ல்ஸ்சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ் எம் சார்ல்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நியமனம் பெற்றுள்ளார்.

நிதியமைச்சு இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இலங்கையின் நிர்வாகசேவையின் சிறப்பு அலுவலராக செயற்படும் பிஎஸ்எம் சார்ல்ஸ், நிர்வாக சேவையில் 26 வருடங்களை பூர்த்திசெய்துள்ளார்

ஏற்கனவே அவர்  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் செயற்பட்டார்.

தமக்கு வழங்கப்பட்ட புதிய பதவி சவாலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் பிஎஸ்எம் சார்ல்ஸ் தெரிவித்தார்.