வெளியேற எத்தனிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதனால் அரசாங்க பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அத்துடன், அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, 155.94 ரூபாயாக இருந்தது. சுதந்திர தின விடுமுறைகளுக்குப் பின் நேற்று வங்கிகள் திறக்கப்பட்ட போது, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு, 156.13 ரூபாயாகக வீழ்ச்சியடைந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]