முகப்பு News Local News முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள முடியும் – லெஃப்டின் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பு

முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள முடியும் – லெஃப்டின் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பு

புலம்பெயர் சமுகத்தினரை இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய பிரிவினராகவே இராணுவம் நோக்குகிறது என்று, ராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பான தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது.
இதில் உரையாற்றிய அவர், இலங்கையின் பாதுகாப்புகள் குறித்த தவறான புரிதல்கள் கலையப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் நிமித்தமே கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில், புலம்பெயர்ந்தோர் விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இராணுவம் முன்னெடுக்கிறது.
இதனை புலம்பெயர் சமுகத்துக்கு தெளிவுப்படுத்துவதன் ஊடாக, பல்வேறு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று லெஃப்டின் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com