முதலிரவு பற்றிய அனுபவத்தின் சில குறிப்புகள்

முதலிரவு பற்றிய அனுபவத்தின் சில குறிப்புகள்.

முதலிரவு

நம் வாழ்க்கையில் நமக்கு மறக்க முடியாத அனுபவம் என்றால் அது முதலிரவு அனுபவமாகும். ஒவ்வொருவருக்கும் தங்களது முதலிரவு பற்றி பலப்பல கனவுகள் இருக்கத்தானே செய்யும்…! ஆனால் அது உண்மையில் எப்படி இருந்தது என்பதை பெரும்பாலும் யாரும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இந்த பகுதியில் பெயர் வெளியிட விரும்பாத இந்திய பெண்கள் தங்களது முதலிரவு அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்களை காணலாம்.

1. ஒருவித வித்தியாசமான பயம் :-

முதலிரவுஎங்களது முதலிரவு எனது கணவரது வீட்டில் தான் நடந்தது. எங்களது அறைக்கு அடுத்து இருப்பது என் கணவரது பெற்றோர்களது அறை தான். ஒரு சிறிய சத்தம் என்றால் கூட அவர்களுக்கு நன்றாக கேட்கும். நாங்கள் அன்று மிகவும் மூட் அவுட் ஆகிவிட்டோம்.

2. அன்றைய தினம் களைப்பாக இருந்தது :-

முதலிரவுஎங்களது திருமணத்திற்கு வெகு நேரமாகியும் உறவினர்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர்களை உபசரித்து, உபசரித்து நாங்கள் களைத்துவிட்டோம். முதலிரவு அறைக்குள் சென்றவுடன் குட் நைட் சொல்வதை தவிர வேறு வார்த்தை எதுவும் பேசமுடியவில்லை.

3.ஆசையாக முத்தமிட கூட முடியவில்லை :-

முதலிரவு

நீங்கள் முதலிரவு என்பது உடலுறவுக்கானது என்று தானே நினைத்துக்கொண்டிருப்பீர்கள்? ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால், திருமணத்தன்று உறவினர்கள், கேமிரா மேன், விடியோ கிராப்பர் என அனைவரையும் பார்த்து முழு நாள் சிரித்து கொண்டே இருந்ததில், எனது முகத்தில் உள்ள சதைப்பகுதி அசைவுகளுக்கு துணை புரியாமல் போனது. என் ஆசை கணவருக்கு என்னால் ஒரு முத்தம் கூட தரமுடியாமல் போனது.

4. வாழ்க்கையில் மறக்க முடியாததும், பிடித்தமானதும் எங்களுடைய இரண்டாவது திருமணம் :-

முதலிரவு

நான் ஒரு விதவை, எனது கணவர் ஒரு விவாகரத்தானவர். எங்களது குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் தான் எங்களுக்கு திருமணமானது. திருமணம் முடிந்த உடன் எங்களுக்கு ஹோட்டலில் ஒரு ரூம் புக் செய்து கொடுத்தனர். எனக்கு மிகவும் பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவரை எப்படி அணுக போகிறோம் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவர் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது எனக்கு பிடித்த ஒரு படத்தின் சிடி. நாங்கள் இருவரும் இரவு முழுவதும் சிரித்து, சிரித்து அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தோம்.

5. நான் அப்படியே அதிர்ந்து விட்டேன் :-

முதலிரவு

நாங்கள் இருவரும் வேறு வேறு கலாச்சாரத்தை சார்ந்தவர்கள். திருமணம் முடித்து முதலில் எனது கணவர் வீட்டிற்கு சென்றோம். அப்போது அங்கே நான் கண்ட காட்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. எங்கள் இருவருக்கும் இடையே பெரிய திரை போடப்பட்டிருந்தது. அவர்களது கலாச்சாரப்படி இருவரும் பார்த்துக்கொள்ள கூடாதாம். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தான், எனது பெற்றோர்களது வீட்டில் எங்களுக்கு முதலிரவு நடந்தது.

6. என்ன நடக்கும் என தெரியாது :-

முதலிரவு

நீங்கள் முதலிரவுக்கு எவ்வளவு தான் தயாராகி சென்றாலும், அங்கே நடப்பது என்னவோ, வேறு ஒரு புது அனுபவமாக தான் இருக்கும். எனக்கு நடந்ததும் அதே தான்.

7. ரொம்ப சீக்கிரமே முடிந்தது :-

முதலிரவு

எங்கள் இருவருக்கும் முதலிரவு குறித்து பலப்பல கனவுகள் இருந்தது. எங்களுடையது தூரத்து உறவு, அவர் வெளிநாட்டில் இருந்தார். ஆறு மாத காலம் நாங்கள் எங்களது முதலிரவு குறித்து பலப்பல கனவு கோட்டைகளை கட்டி வைத்திருந்தோம். அந்த நாள் வந்த போது, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டத்தில், முதலிரவு சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]