முதலமைச்சர் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் எஸ். சுகிர்தன்

முதலாவது வடக்கு மாகாண சபையில் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சர் உள்ளிட்ட ஏனையோர் அனைவரும் கத்துக் குட்டிகளாகவே அரசியலுக்கு வந்திருக்கின்ற போதும் இன்று முதலமைச்சர் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்றுவிட்ட நிலையில் எமது மக்களுக்காக அவர் இனி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் உறுப்பினர் எஸ். சுகிர்தன் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 112 ஆவது அமர்வு மாகாண சபை பேரவைச் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலமைச்சரின் அறிக்கை மீதான விவாதத்தின் போதே;; சுகிர்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய அரசாங்கம் எங்களுக்கு தெரியாமல் தான் நினைத்தததைச் செய்கின்றமை போன்று வடக்கு மாகாண சபையும் உறுப்பினர்களான எங்களுக்கு தெரியாமல் பலதைச் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு மாகாண சபையில் ஆளுங்கட்சியாக நாங்கள் இருக்கின்ற போதும் கடந்த நான்கு வருடங்களில் சபையில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

இன்று மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற போது அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடமே இருக்கின்றது. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்கே தெரியாத நிலையில் அவற்றை எவ்வாறு எம்மால் தீர்த்து வைக்க முடியும்.

ஆகவே, இனி வரும் காலங்களிலாவது மக்களது தேவைகள் மற்றும் பிரச்சனைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

தற்பொது இறுதி வரவு செலவுத் திட்டமும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச்சபைக்கு எங்களில் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சர் உள்ளிட்ட நாங்கள் பலரும் கத்துக் குட்டிகளாவே அரசியலுக்கு வந்திருந்தோம்.

ஆனால் தற்போது முதலமைச்சர் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கின்றார். ஆகவே அவர் எமது மக்களுக்காக இனிவரும் காலங்களில் பாராமன்றினூடாக குரல் கொடுக்க வேண்டிய அதே வேளையில் எமக்கு அடுத்து நல்லதொரு முதலமைச்சரும் கிடைக்க வேண்டுமென்றுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]