முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சட்ட தொகுதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய இலங்கைக்கான நிலையான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.