முதற்கட்டமாக 130 பேருப்பு இழப்பீடு

கண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, சேதமடைந்த சொத்துகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்கும் முதற்கட்ட நடவடிக்கை இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 130 பேருக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் பூஜாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, அக்குரணை, தெல்தெனிய மற்றம் கஹவட்ட கோரளை ஆகிய பிரசேத மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

சேதமடைந்த 65 வியாபார நிலையங்கள் மற்றும் 66 வீடுகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும்.

சேதமடைந்த வியாபார நிலையத்துக்கு 1 இலட்சம் ரூபாய் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இந்த இழப்பீடு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.