முட்டைகோஸில், உடலுக்கு ஊட்டம் தரும் வகையில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன.
இதிலுள்ள விட்டமின் ஏ கண் பார்வை தெளிவாக தெரியவும், ஊட்டச்சத்துக்கள் சரும வறட்சி, தலைமுடி உதிர்வு, உடல் சூடு,தொற்று நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்த உதவுகின்றன.
முட்டைகோஸை வேக வைத்த நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் எடை குறைக்க
இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே.
அவர்கள் முட்டை கோஸ் ஜூஸ் அருந்துவது நல்லது. ஏனெனில் முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரியே உள்ளதால் உடலில் அதிகபடியாக கொழுப்பும் சேராது.
இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.
அல்சரை குணப்படுத்த
அல்சர் என்பது தொண்டை, உணவுக்குழாய், இரைப்பையில் ஏற்படும் புண்களே ஆகும். இதற்கு காரணம் தினமும் நாம் சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் நேரம் மாற்றி மாற்றி சாப்பிடுவது மற்றும் தொடர்ந்து காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது தான்.
அல்சர் உள்ளவர்கல் முட்டைகோஸு தண்ணீர் பருகி வருவதினால் விரைவில் குணமடைய முடியும்.
ஏனெனில் முட்டைகோஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.
புற்றுநோய் குணப்படுத்த
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படக் கூடிய நிலை உருவாகி உள்ளது.
புற்றுநோயால் பதிக்கபட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் மிகவும் நன்மையை தருகின்றன.
இதற்கு காரணம் முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருப்பதால் இவை நுரையிரல்,வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.
வயதான தோற்றம் வருவதை தடுக்க
இன்று பலரும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளனர்.
ஒரு சிலர் இளமையாக இருக்க பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க முட்டைகோஸ் ஜூஸ் பெரிதும் உதவும்.
முட்டைகோஸ் ஜூஸில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் ஆகியவை நிறைந்து இருப்பதால் இதனை அவர்கள் தினமும் குடிப்பதால் அவர்கள் விரைவில் வயதான தோற்றம் உண்டாவதை கட்டுப்படுத்த உதவுகின்றன.
இதயம் மற்றும் கல்லீரலை பாதுகாக்க
முட்டைகோஸ் ஜூஸில் இருக்கக்கூடிய விட்டமின் கே மற்றும் சி ஆகியவற்றினால் உடலில் இருக்கக்கூடிய கிருமிகளுக்கு எதிராக போராடி இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கின்றன.
மேலும் முட்டைகோஸ் ஜூஸில் இண்டோல் 3 கார்போனைல் இருப்பதால் கல்லீரலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை தவிர்த்திடும்
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com