முட்டைகளை இறக்குமதி செய்ய தேவையில்லை

தேவையான முட்டைகள் உள்நாட்டு சந்தையில் காணப்படும் நிலையில், முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க, கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹெரிசனுக்கு இது குறித்து இன்று அறிவுறுத்தியுள்ளார்.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்பதால், அது தொடர்பில் இலங்கை துறைமுகம் மற்றும் சுங்கப் பிரிவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவருட பண்டிகை காலத்திற்கு தேவையான அளவு முட்டைகள் இருப்பதால் இறக்குமதியாளர்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]