முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுமாறு மகிந்தவுக்கு சவால் விடுத்துள்ள ஐ.தே.கட்சி

மகிந்த ராஜபக்ச தனது அரசின் பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்துக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார். கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று முற்பகல் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார். இந்தக் கூட்டம், பிரதமரின் செயலகத்தில் இடம்பெற்றது.

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தமது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]