முடங்கியது கோடம்பாக்கம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோடம்பாக்கம்

மார்ச்16ம் திகதி முதல் படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படாது என்ற கோடம்பாக்கம் அறிவிப்பை தொடர்ந்து, திரைப்படரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பிப்ரவரி இறுதி வாரம் வெளியான பிரபல இயக்குனர்களான பாலா மற்றும் சுந்தர். சி ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து எந்த ஒரு தமிழ் திரைப்படமும் திரையிடப்படவில்லை.  இதற்கான காரணம் என்னவெனில் QUBE, UFO நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்தியாவின் நான்கு மொழி புதுப்படங்களும் மார்ச்1ம் திகதி முதல் வெளிவராது என்ற அறிவிப்பாகும்.

QUBE, UFO என்பது என்ன?

சினிமாதொழில் நுட்பத்தின் ஆரம்பகாலங்களில் படச்சுருள்கலிலேயே (REEL) திரைப்படங்கள் எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  1980 ம் ஆண்டுகாலப் பகுதியில் சினிமாவின் ஒலி   DTS ( Digital track sound) எனும் தொழில் நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த தொழில் நுட்பத்தை படச்சுருள்கலில் இனைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே” QUBE ஆகும். பிற்காலத்தில் சினிமாவின் ஒளி அமைப்புகளும் அதாவது படப்பிடிப்பு மற்றும் திரையிடுதல் என்பனவும் டிஜிட்டல் மாயமானது, இக்காலத்தில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட திரைப்படத்தை டிஜிட்டல் வடிவிலேயே திரையில் திரையிடப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த Digital Projection முறைக்கு முன்னோடியாக செயற்பட்டதும் QUBE நிறுவனமே .

முதலில் இந்த தொழில்நுட்பம் 720 PIXEL அளவிலேயே கையாளப்பட்டது இம் முறமை E-CINEMA  என்று அழைக்கப்பட்டது. சினிமாகமராவில் இருக்கும் தரவுகளை வடிவம்மாற்றி ( FORMAT) Digital Projector வழியாக திரையில் காண்பிக்கும் தொழிற்பாடுகளுக்காக QUBE  நிறுவனம் VPF ( Virtual projection fee) எனும் ஒரு கட்டணத்தை அறவிட்டது.

படச்சுருள்களில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு திரைப்பட்டு வந்த காலங்களில், கமராவில் இருக்கும் படச்சுருள்கலை பிரின்ட் செய்து பின்னர்  edit செய்து கடைசியில் பிரதி எடுப்பது வரையிலான முழுச்செலவும் தயாரிப்பாளர்களையேசாரும், அதேபோல் திரைத்துரை டிஜிட்டல் மயமான பின்னர் சேவை வழங்குநருக்கான VPF கட்டணத்தையும் தயாரிப்பாளர்களே செலுத்திவந்தனர். இக்கட்டணம் பெரிய பட்ஜெட் படம் சிறிய பட்ஜெட்படம் என வித்தியாசம் ஏதுமில்லாமல் ஒரே கட்டணமாகவே அமைந்தது, இதனால் சிறியபட்ஜெட் பட தயாரிப்பாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர் .அதே வேளையில் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் Holly wood திரைப்படங்களுக்கு mastering charges மட்டுமே அறவிடுகின்றனர், VPF  கட்டணம் அறவிடப்படுவதில்லை, அப்படியானால் ஏன் தமிழ் படங்களுக்கு மட்டும் அதிக அளவிலான கட்டணம் அறவிடுகிறீர்கள்? என தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய அதே நேரம் QUBE தரப்பில் “ எமது வருவாயை ஏன் பார்க்கிறீர்கள்? நடிகர்களின் சம்பளத்தை குறையுங்கள் என்ற வாதப்பிரதிவாதங்களுக்கிடையே தமிழ் சினிமா இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு திரையரங்க உறிமையாளர்கள் சங்கம் 4 புதிய கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளது. இக்கோரிக்கைகள் நிறைவேறும்வரை, மார்ச்16ம் திகதி முதல் திரையரங்குகளை மூடுவது என தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு கிட்டும் வரை தமிழ்திரைப்படங்கள் திரையிடப்படாது என்பது நிச்சயம்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]