முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு  வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக கோறளைப் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி கோறளைப்பற்று (வாழைச்Nனை) பிரதேச சபை முன்றலில் இன்று (13) பதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முச்சக்கர வண்டி

கறுவாக்கேணி பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்பாட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் பிரதேச மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஐக்கிய தேசிய கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக இரண்டு வருடங்களாக பல தமிழ் மற்றும் முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்ளுக்கிடையில் பிரச்சினைகள் நடைபெற்றுவருகின்றன.

கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் 15 பேருக்கு முச்சக்கரவண்டி தரிப்பதற்கான அனுமதி ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. பின்னர் முஸ்லிம் பகுதியில் தரிப்பிடம் வழங்கப்பட்டிருந்த 6 பேர் அங்கிருந்து பிரிந்து  வந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு 23 பேருக்கு குறித்த இடத்தில் கோறளைப்பற்று பிரதேச சபையினால் அனுமதி வழங்கபட்டிருந்தது.

தமிழர்களுக்கு தரிப்பிடம் வழங்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் முஸ்லிம்கள் முச்சக்கரவண்டி சாரதி கள் அத்துமீறி இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதால் பல தடவை பிரச்சினைகள் எற்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரியப்படுத்தியபோது 10.07.2017 அன்று வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டக்களப்பு பாதை தமிழ் தரப்பினர் முச்சக்கரவண்டி தரிப்பித்தை பயன்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கோறளைப்பற்று பிரதேச சபை கூட்டத்தின் தீர்மானத்தினை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அபிவிருத்திக்குழுத் தீர்மானங்களை அலட்சியம் செய்யாதே, எங்களை இனியும் ஏமாற்றாதே, 2வருட கால இழுத்தடிப்பு இனியும் வேண்டாம், பதிவு செய்துள்ள தரிப்பிடத்தை பங்குபோட்டுக் கொடுக்காதே, எங்கள் பிரதேசத்தில் சுயமாக வாழவிடு, தமிழர் வாழ்வாதாரத்தை சூரையாடாதே, தமிழர் பிரதேசத்தை அபகரிக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட இறுதியில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய அகஜர் கையளிக்கப்பட்டது இங்கு  பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன் பதிலளிக்கையில் – கோறளைப்பற்று வாழைச்சேனை பொலிஸ்நிலைய சுற்றுவட்டார முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக பாரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.  கடந்த முறை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டக்களப்பு பாதை தரிப்பிடத்தை தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கையளிக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் சுமூகநிலை ஏற்படுத்தித இரு தரப்பினரையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் இணக்கம் காணப்படவில்லை. இதுதொடர்பாக உள்ளுராட்சி திணைக்களத்துக்கு அறிவித்து இந்த பிரச்சினைக்கு உதவுமாறு திணைக்களத்தின் உதவியை நாடியிருந்தேன். இதுதொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.முச்சக்கர வண்டி

கடந்த சனிக்கிழமை இந்த முதலமைச்சர் இந்த பிரதேசத்துக்கு வருகைதந்தவேளை முச்சக்கரவண்டி  சாரதிகள் அவரிடம் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். இன்னும் இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு இனங்களுக்குமிடையே எந்தவொரு மனக்கசப்பும் இல்லாமல் இணக்கப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக கூறியிருந்தார்.முச்சக்கர வண்டி

உள்ளுராட்சி திணைக்களம் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் உள்ளுராட்சி அமைச்சு பணிப்புரைக்கமைய செயற்பட வேண்டிய கட்டுப்பாடு பிரதேச சபைக்கு உள்ளது. உள்ளுராட்சி அமைச்சின் அறிக்கை கிடைக்கப்படும்வரை இரண்டு வார கால அவகாசம் தேவை என்றார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]