முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பில் கருத்து வேறுப்பாடு!

முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பில் முச்சக்கரவண்டிச் சங்கங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றன.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவால் குறைக்க முடியாது என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டமையினால் முச்சக்கரவண்டிகளின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினால் குறைக்க உள்ளதாக இலங்கை சுயதொழில் புரிவோர் சங்கம் மற்றும் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் என்பன தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]