முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயம்

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்பியன் தோட்ட குடியிருப்பு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குடியிருப்பு மீது குறித்த முச்சக்கரவண்டி விழுந்தமை காரணமாக குடியிருப்பின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டனிலிருந்து அக்கரப்பத்தனை கல்மதுர தோட்டத்திற்கு சென்றபோதே நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் சிறுமி ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.