‘முச்சக்கரவண்டி’யொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!!

தணமல்வில – கொமலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து எரிந்த நிலையில் நேற்று பிற்பகல் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தணமல்வில -கங்கேயாய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.

குறித்த நபர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டு முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தணமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]