முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தமையே தோல்விக்கு காரணம் : மோர்தசா

முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தமையே தோல்விக்கு காரணம் பங்களாதேச் தலைவர் மோர்தசா தெரிவித்துள்ளார்.

முக்கியமான

சாம்பியன் கோப்பை அரை இறுதியில் இந்தியாவிடம் தோற்றது குறித்து பங்களாதேச் தலைவர் மோர்தசா கூறியதாவது:-

தமிம் இக்பால், முஷ்பிகுர் ரகிம் நல்ல பார்ட்னர் ஷிப் கொடுத்தனர். ஆனால், களத்தில் இருக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நாங்கள் 330 ஓட்டங்கள் வரை எடுத்திருக்க வேண்டும்.

இதுபோன்ற மிகப்பெரிய போட்டியில் விளையாட நாங்கள் முழுமையாக தயாராக வில்லை என்பதை காட்டுகிறது. முக்கிமான ஆட்டங்களில் மனரீதியாக வலுவாக இருக்கவேண்டியது அவசியம். 2019-ஆம் ஆண்டு உலக கோப்பையில் வலுவான அணியாக வருவோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]