இலங்கையில் முகப்புத்தகத்துக்கு புதிய தடை

வன்முறைகளை அடுத்து, கடந்த 7ஆம் திகதி முதல், முகநூல், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து வைபர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும், முகநூல் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பதுடன், நாளை கொழும்பு வரும், முகநூல் நிறுவன அதிகாரிகள், அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளனர்.

முகநூல் கருத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து அவர்கள் கலந்துரையாடவுள்ளதுடன், அதன் பின்னர், பேஸ்புகில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகள் வலுவாக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]