முகப்பரு தழும்பைப் போக்க வெந்தையமே போதுமானது!..

சமையலில் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் பல நோய்களுக்கு மருந்தாக இருப்பதோடு அழகை பாதுகாக்கவும் உதவுகிறது.

கூந்தல் நன்றாக வளரவும் பொடுகு தொல்லையை நீக்கவும் பயன்படுகிறது. மேலும் முகப்பரு தழும்புகளை போக்கவும் உதவுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை. முகத்தையும் பொலிவாக மாற்றும்.

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் மென்மையாக மாறும். எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மாறும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் மறைந்து தழும்புகள் மறையும்.

வெந்தயத்தை நன்றாக நீரில் கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.

வெந்தயத்தை ஊற வைத்து மைப் போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவி  ஒரு மணிநேரத்திற்கு பின் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, மிருதுவாக மாறும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]