முகநூல் காதலால் 55 இலட்சத்தை இழந்த வெளிநாட்டவர்! யாழ் பெண்ணின் மோசடி அம்பலம்…

யாழ்ப்பாணம் இருபாலையை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அவருக்கு பேஸ்புக் ஊடாக 30 வயதான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகினார்.

இருவரும் பேஸ்புக்கில் காதலித்து, திருமணம் வரை சென்றனர். திருமணத்திற்காக 60 வயது காதலன் ஜேர்மனியிலிருந்து இருபாலைக்கு வந்தார். 30 வயது காதலியும் இருபாலைக்கு வந்தார். அவர் தன்னை வவுனியா என்றே, காதலனிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

காதலியின் வங்கிக் கணக்கில் 15 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டதுடன், 35 இலட்சம் ரூபா பெறுமதியில் தாலி, நகைகள், தொலைபேசி, திருமண சேலை என்பவற்றை கொள்வனவு செய்திருந்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் யுவதி, அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து, காதலன் கமலநாதன் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, காதலன் கமலநாதன் அதிரடி அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். நகைகளுடன் ஓடிப்போன பேஸ்புக் காதலி குறித்த தகவல்களை தருபவர்களிற்கு 250,000 இலட்சம் பணப்பரிசு தருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிசாரின் விசாரணையில் பேஸ்புக் காதலி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]