முகநூலில் நடத்திய கருத்துக்கணிப்பில் ரணிலை விட சஜித்துக்கே ஆதரவு அதிகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியடையக் கூடிய வேட்பாளர் யார் என இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா முகநூலில் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 வீதமானவர்களின் ஆதரவு ரணிலுக்கும் 73 வீதமானோரின் ஆதரவு சஜித்துக்கும் கிடைத்துள்ளது.

ரணில் மற்றும் சஜித்தின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட அமைச்சரவை அந்தஸ்தற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பெரேரா- வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களில் யாருக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு இருக்கிறதென கேட்டு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றுக்கு விட்டிருந்தார். இதில் 27 வீதமான ஆதரவு மட்டுமே ரணிலுக்கு கிடைத்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரணிலை தொடர்புகொண்டு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் ஏற்கனவே தீர்மானித்துள்ள நிலையில், இப்படியான செயற்பாடுகள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அஜித் பெரேரா மீது நடவடிக்கை எடுக்குமாறு சிலர் ரணிலுக்கு கூறியிருப்பதாக தகவல் !

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]