மீன ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது…

மேஷம்

மேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யா ணப் பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். மனைவி வ ழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வ ரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர் களால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். யோகா, தியானம் என மனம் செல்லும். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிம்மதி கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். எதார்த் தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]