முகப்பு Horoscope மீன ராசிக்காரர்களே இன்றைய தினம் கொஞ்சம் உஷாராவே இருங்க- 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ

மீன ராசிக்காரர்களே இன்றைய தினம் கொஞ்சம் உஷாராவே இருங்க- 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ

மேஷம்

மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப் பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர் களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள்.பணப்புழக்கம்அதிகரிக்கும்.உறவினர்கள், நண்பர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல் கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர் களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள்.உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்
பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம்கேட்டு நச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவஉணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன் னேறும் நாள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com