முகப்பு News Local News மீன் பிடிக்கச் சென்றவர் களப்பிலிருந்து சடலமாக மீட்பு

மீன் பிடிக்கச் சென்றவர் களப்பிலிருந்து சடலமாக மீட்பு

மீன் பிடிக்கச் சென்றவர் களப்பிலிருந்து சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – வாகரைப் பொலிஸ் பிரிவு சின்னத்தட்டுமுனை களப்பு பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை 10.07.2018 மீனவர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா கயிலைநாதன் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராகும்.

திங்கட்கிழமை மாலை சின்னத்தட்டுமுனை களப்பப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்களும் சக மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சடலம் களப்பு நீருக்குள் கிடப்பது தெரிய வந்ததையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இம்மீனவர் வலைவீசிக் கொண்டிருந்தவாறே மாரடைப்புக் காரணமாக களப்பு நீருக்குள் வீழ்ந்து மரணித்திருக்கலாம் என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com