மீன் ஏற்றுமதிக்கு 15சதவீத வரிச்சலுகை

GSP+நிவாரணம் கிடைத்த பின்னர் நாட்டின் மீன் ஏற்றுமதியின் மூலம் கூடுதலான வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருட காலத்திற்கு மேலாக நாட்டிற்கு GSP+ நிவாரணம் கிடைக்காததினால் மொத்த ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தது. குறிப்பிட்ட வருமானம் கிடைக்காததினால் தேசிய வருமானத்தின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியையும் குறைக்கவேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

fish exporters in sri lanka

நாடு தொடர்பில் சர்வதேச ரீதியில் நிலவிய நற்பெயர்மீதான களங்கத்தை நீக்குவதற்கு சமகால அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதனால் தற்பொழுது நாடு தொடர்பில் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

விசேடமாக மனிதஉரிமைகளை பாதுகாக்கும் நாடு என்ற ரீதியில் எமது நாட்டை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எமக்கு இல்லாமல் போன GSP+ நிவாரணத்தை மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்ததுடன் ஆடைத்தொழிற் துறையில் மாத்திரமன்றி விசேடமாக மீன் ஏற்றுமதியிலும் பாரியளவிலான நன்மையான எமது நாட்டிற்கு கிடைத்துள்ளது.

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுடன் புளுP10 வரிச்சலுகை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போது இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு 13ஆயிரத்து 932மெற்றிக்தொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 21ஆயிரத்து 539 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு 1817 மெற்றிக்தொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏனை ஐரோப்பிய நாடுகளுக்கு 515 மெற்றிக்தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர அமெரிக்காவிற்கு 4088 மெற்றிக்தொன் , யப்பானுக்கு 1717 மெற்றிக்தொன்னும் ஏனைய நாடுகளுக்கு 5796 மெற்றிக்தொன் மீனும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.