முகப்பு News Local News மீன்பிடி வாடிகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைப்பு

மீன்பிடி வாடிகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைப்பு

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் உள்ள 8 மீன்பிடி வாடிகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.

இதில் பெருமளவான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள், அங்கு இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் மீன்பிடித்துறை அமைச்சர் அங்கு சென்று பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அறிவித்திருந்த சூழ்நிலையிலேயே நேற்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com