மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் -அமைச்சர் மகிந்த அமரவீர

கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் ஆலோசனைகளைப் புறக்கணித்து பயணிகளை ஏற்றிச்செல்லும்மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கட்டுக்குருந்த கடலில் விபத்திற்கு உள்ளான மீன்பிடிப் படகு எந்த வகையிலும் பயணிகள் போக்குவரத்திற்குப் பொருத்தமானதல்ல. இதில் ஐந்து பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த சம்பவத்தில் 30 பேர் பயணித்துள்ளதாகவும் படகில் இருந்த எந்தவொரு பயணியும் பாதுகாப்பு அங்கி அணிந்திருக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விபத்திற்கு உள்ளான படகின் கடற்றொழில் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு கடற்றொழில்பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

விபத்து பற்றி விசாரித்து அறிக்கைசமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.