மீனவர்கள் தொடர்பில் மோடிக்கு கடிதம்

மீனவர்கள் தொடர்பில்

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்க அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 84 மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 159 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும்.

எனவே, இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை தாமதமின்றி விடுவிக்க தேவையான நடவடிக்கையை இலங்கை அரசுடன் பேசி மேற்கொள்ளும்படி, வெளியுறவுத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]