மீனவர்கள், உல்லாசப் பயணிகள் பொதுமக்களுக்கான குடிநீர் வசதி

குவைத் நாட்டு அல்-நஜாத் அறக்கொடை அமைப்பினால் இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தினூடாக பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்;ட குடி நீர் வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் புன்னைக்குடா கடற் கரையில் மீனவர்கள், உல்லாசப் பயணிகள், பொதுமக்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்-நூர் கொடையாளி அமைப்பைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.எல்.எம். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.

சுமார் ஒரு இலட்ச ரூபாய் செலவில் 1500 லீற்றர் கொள்ளவுடன் அமைக்கப்பட்ட குடி நீர்த் தாங்கி பிரதேச மக்களிடம் கையளிக்கும் வைபவம் வியாழக்கிழமை 03.01.2019 இடம்பெற்றது.

புன்னைக்குடா புண்ணியா ராமய விஹாராதிபதி தம்பகல்லே வனரத்தின தேரர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர்களான எம்.எல். அப்துல் றஹ்மான், ஏ.எம். சலீம், ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைத் தலைவர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஐ. தஸ்லிம் உட்பட இன்னும் பிரமுகர்களும் பயனாளிகளான மீனவர்களும் கலந்து கொண்டனர்.

சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூரில் மக்கள் கூடும் பொது இடங்களான வைத்தியசாலை, பொதுச் சந்தை, பாடசாலைகள் என்பனவற்றுக்கு அருகே 7 இடங்களில் 1500 லீற்றர் கொள்ளவுள்ள 7 தண்ணீர்த் தாங்கிகளும், நீரைச் சுத்திகரிக்கும் உபகரணமும் சுமார் 158000 ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]