மீனவர்கள்  ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஒரே தடவையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் தாம் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, சிலாபம் நகரின் பல பகுதிகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் சிலாபம் மீன் விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.