மீனவர்களின் பிரச்சினைக்கு தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

வடமாராட்சி கிழக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வெளிமாவட்ட மீனவர்களது அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் வட.மாகாண மீனவர்களினது எதிர்ப்பு போராட்டம் குறித்து இன்று அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது வட மாகாண மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுமாறு, அமைச்சர்களான மனோ கணேசனுக்கும், விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடமாராட்சி கிழக்கில் அத்துமீறியுள்ள வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று ஜனாதிபதிக்கு மகஜரொன்றை கையளித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]