மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது

மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் உபகரணங்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புண்ணக்குடா கடற்கரையில் நேற்று  இரவு இனந்தெரியாத நபர்களினால் மீன் பிடி உபகரனங்கள் (வலை, வோட் ) என்பன அசிட் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

புண்னைகுடாவை சேர்ந்த  கி.சபேஸ்கரன் என்பவரது 15 இலட்சம் பெறுமதியான மீன்பிடி  உபகரணங்களான 3 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகலே இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் அசிட் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் உபகரணங்கள்

தற்போது கடல்  அதிகமாக கொந்தளிப்பதனால்  மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் உள்ள நிலையில் இந்த நாச கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த 3 படகுகளில் மீன்பிடியில் ஈடுபடும் 13 மீனவர் குடும்பங்கள் இவ்வாறான நாசகர செயலால் தமது வாழ்வாதாரத்தை இளந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மீனவர்களின் உபகரணங்கள்மீனவர்களின் உபகரணங்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]