மீனவரின் சடலம் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரைத் தேடும்பணி 4வது நாளாகத் தொடர்ந்த வேளையில் வியாழக்கிழமை 11.10.2018 ஆழ்கடல் பகுதியில் மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை – புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ரவிச்சந்திரன் (வயது 37) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த திங்கட்கிழமை இரவு 08.10.2018 மீன்பிடிக்காக கடலுக்குச் சென்றிருந்த சமயம் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து காணாமல் போயிருந்தார்.

இதுபற்றி பிரதேச மீனவர்களால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வந்தது.

வாகரைப் பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]