மீத்தொட்டமுல்ல அனர்த்தம் பற்றி ஆராய உயர்மட்டதொழில்நுட்பக்குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது ஜப்பான்

மீத்தொட்டமுல்ல அனர்த்தம் பற்றி ஆராய உயர்மட்டதொழில்நுட்பக்குழுவை
இலங்கைக்கு அனுப்புவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மேற்படி சம்பவத்தால் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. உடைமைகளும் சேதமடைந்துள்ளன. அதிகளவானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இது துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். சம்பவம் தொடர்பில் ஜப்பான் மக்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையை இயல்புவாழ்க்கைக்குத் திருப்புவதற்குத் தேவையான சகலவிதமான உதவிகளையும் ஜப்பான் வழங்கத் தயாராகவுள்ளது. இந்த அனர்த்தம் குறித்து ஆய்வுசெய்வதற்கு ஜப்பானிலிருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும்.

அடுத்தகட்டப் பணிகள் தொடர்பில் அந்தக்குழு ஆலோசனைகளை முன்வைக்கும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதென அரச தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]