மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசங்கமே பொறுப்புக்கூற வேண்டும் : தினேஷ் குணவர்தன

மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்பு கூற வேண்டும் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பொரள்ளையில் என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

குப்பை மேடுசரிந்து விழுந்து அதிகளவானோர் உயிரிழந்த சம்பவம் இலங்கையிலேயே பதிவாகியுள்ளது. இந்த அனர்த்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாகியுள்ளதுடன் அதிகளவிலானோர் இந்தக் குப்பை மேட்டில் புதையுண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் இட்மபெற்றதுடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்கவேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் தேகத்தினை உரியமுறையில் நல்லடக்கம் செய்யவேண்டுமெனவும், பாதிக்ப்பட்ட தரப்புக்கு நியாயமான நட்டஈடு வழங்க வேண்டுமென ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் கேட்டுக்கொண்டிருந்தோம்.

அண்மையில் நீதிமன்ற தீர்ப்பொன்றின் ஊடாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவவீரர்களால் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரின் குடும்பத்துக்கு 20இலட்சம் வழங்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால், கொலன்னாவை மீதொடமுல்லை பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு அரசு அவசரமாக ஒரு இலட்சம் ரூபா வழங்க திட்டமிட்டிருப்பது வெட்கத்துக்குரிய விடயமாகும். பாதிக்கப்பட்ட தரப்பின் அத்தியாவசிய தேவைகளை ரூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி பின்னர் நியாயமாக நட்டஈட்டினை அம்மக்களுக்கு வழங்க வேண்டும்.

மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு

கொலன்னாவை மீதொடமுல்லை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு அதிகளவிலான பொறுப்பு அரசுக்கே உள்ளது. அனர்த்தம் என்ற போர்வைக்குள் இந்த அரசு இப்பிரச்சனையை மறைத்துவிட முடியாது.
இங்கு கொட்டப்படவேண்டிய குப்பை தொடர்பில் காணப்பட்ட சட்டங்களை மீறி கொழும்பு மாநகர சபை செயற்பட்டுள்ளது. நீர்முகாமைத்துவத்தில் காணப்பட்ட அசம்ந்த போக்கே இந்த பாரிய அனர்த்தத்துக்கு காரணமாக அமையலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொலன்னாவை பிரதேசசபை கலைக்கபட்டு மீண்டும் அந்ந உள்ளுராட்சி சபை மீண்டும் உரியகாலப்பகுதியில் அமைக்ப்படாததால் பொதுமக்களுக்கான உதவி உரியகாலப்பகுதியில் கிடைக்காமல் போனது. இந்தச் சம்பவத்துக்கு தீர்வுகாணும் அரசு குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]