மீதொட்டமுல்ல குப்பைமேடு வெடித்து சிதறும் அபாயம் – ஜப்பான் குழுவினர்

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினைச்சுற்றி பாதுகாப்பு கட்டிடம் அமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை மேடு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நேற்று இலங்கை வந்துள்ள ஜப்பான் விசேட தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் குழுவினர் 2வது நாளாகவும் இங்கு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவில் விசேட தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
குப்பைமேடு தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை இந்த குழுவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த குப்பைமேடு சரிந்து விழுவதற்கான காரணத்தை உறுதிசெய்வதும் மேலும் இந்த குப்பைமேடு சரிந்துவிழும் அபாயம் உண்டா? என்பது தொடர்பிலும் இக்குழுவினர் ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
மீதேன் வாயு இதில் எந்தளவில் அடங்கியுள்ளது என்பதில் கவனம் செலுத்துகின்றனர். இது 1.6 வீதம் இருத்தல் வேண்டும் ஆனால் இங்கு 16 சதவீதம் இருப்பதாகவும் இது ஆபத்தானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த குப்பைமேடு வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புவிசரிதவியல் தொடர்பான இக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மீதொட்டமுல்ல மீதொட்டமுல்ல