மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் காப்பீடு வழங்க அரசு தீர்மானம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், சொத்துகளை இழந்தவர்களுக்கு அதிகப்பட்சமாக 25 இலட்சம் ரூபாயும் இவ்வாறு காப்பீடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலையடுத்து நிதியமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்றாலும், இன்னமும் இழப்பீடு வழங்குவது தொடர்பில் அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.  நாளை நடைபெறவுள்ள அமைசச்சரவை கூட்டத்தின் போது  இழப்பீடு குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கு அமைய கொழும்பு நகரில் மாடி குடியிருப்புத் தொகுதி திட்டத்தில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் யோசனையை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் இதுவரை 28 பலியாகியுள்ளதாகவும் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

228குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 980 பேரில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,11 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

79 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,17 வீடுகள் பகுதியளவுசேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழாமொன்று நேற்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இந்த குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்ககழகத்தின் துணைவேந்தர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் , விவசாய விஞ்ஞானம் உள்ளிட்ட பல பீடங்களை சேர்ந்த பேராசியர்கள் அடங்கிய குழுவினரே மீதொட்டமுல்ல பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய பிரதமர் விசேட நிபுணர் குழுவொன்றையும் இந்த விடயம் தொடர்பில் ஆராய அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் கொழும்பில் சேரிக்கும் குப்பைகளை கொழும்புக்கு புறபாக கொட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இராணுவத்தினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]