மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் இரங்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறித்த இரங்கள் செய்தியில் கூறியுள்ளதாவது,
இந்தச் சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டும்.
இந்தக் இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாடுபடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தச் சம்பவத்தில் காயமுற்றோருக்காக தான் வேண்டுவதுடன், அவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்தத் துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஒற்றுமையை வெளிக்காட்ட முன்வருமாறும் இரா. சம்பந்தன் விடுத்துள்ள இரங்கள் செய்தியில் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]