மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்

முத்துராஜவெல மீதொட்டமுல்லை குப்பை மலை சரிந்தமை காரணமாக இருப்பிடங்களை இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அனர்த்தத்தில் வாகனங்களின் ஆவணங்கள் சேதமடைந்தமை காரணமாக மக்களின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்காரணமாக, பாதிக்கப்பட்ட வாகன ஆவணங்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் பணிகளை துரிதப்படுத்தி நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இது குறித்த அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தெகை பெறும் காலம் மே மாதம் வரை நீடிக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]