மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதன் காரணமான மேற்படி உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தின் போதே ஐந்து சிறுவர்களும் உயிரிழந்தவர்களின் உள்ளடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராணுவ களமிறக்கத்துடன், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைவாக இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகள் உட்பட ஏனைய வசதிகள் அனைத்தும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மீதொடமுல்ல குப்பைமேடு

கொலன்னாவ மீத்தெட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 625 பேர் வரை பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அரச செலவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இதேவேளை, மீதொட்டுமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

மீதொடமுல்ல குப்பைமேடு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]