மீதொடமுல்லை குப்பைமேடு அனர்த்தம் ; நழுவ பார்க்கிறது அரசாங்கம் ; கம்மன்பில குற்றச்சாட்டு

மீதொடமுல்லை குப்பைமேடு அனர்த்தத்தை முன்னாள் அரசாங்கத்தின் மீது சுமத்திவிட்டு தற்போதைய அரசாங்கம் தப்பிக்க முயற்சிப்பதாக, பிடகோட்டையில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறியிருந்தார்.

மீதொடமுல்லை
உதய கம்மன்பில

அவர் மேலும் கூறியதாவது,

மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து விழுந்த சம்பவம் வெறுமனே அனர்த்தமல்ல, அரசாங்க அதிகாரிகளின் அலட்சியப்போக்காலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

கடந்த அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிவிட்டு இந்த அரசாங்கம் நழுவ பார்க்கிறது. முன்னாள் அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் இந்த அரசிலும் உள்ளார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்களா?

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றுவதற்கு முன்னாள் அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]