மீண்டும் 6வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- திருந்தாத ஜென்மங்கள்!

எவ்வளவு பேசினாலும் சொன்னலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இதோ இன்னொரு ஆசிபா..

பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், ஆடைகளின்றிபலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில்ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் ஜகன்னாத்பூர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6 வயது சிறுமி ஒருவர் தின்பண்டம் வாங்குவதற்காககடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில்மின் தடைஏற்பட்டது.
ஒரு மணி நேரம் ஆகியும்கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும்உறவினர்கள் சிறுமியைஅந்த பகுதி முழுவதும் தேடிஅலைந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியைஏமாற்றி பள்ளி வளாகத்திற்கு அழைத்துசென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், சிறுமியை தாக்கி கொல்லமுயன்றுள்ளார்.

சிறுமி சுயநினைவிழந்த நிலையில் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்..

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பல இடங்களில்சிறுமிய தேடியும்கிடைக்காததால், கடைசியாகபள்ளி வளாகத்திற்குள் ஆடைகளின்றி, பலத்தகாயங்களுடன் சுயநினைவில்லாமல் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளனர்.
தலை, முகத்தில் காயங்களோடுசிறுமி கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகவும், தலை, முகம், கழுத்தில் காயங்கள் அதிகமாக உள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகஅந்த ஊரை சேர்ந்த நபரை பொலிசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]