மீண்டும் விஜய் சேதுபதியுடன் லட்சுமி மேனன்!

மீண்டும் விஜய் சேதுபதியுடன் லட்சுமி மேனன்!

தற்போது ‘கவண்’, ‘அநீதி கதைகள்’, ‘விக்ரம் வேதா’, ’96’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இதனை தொடர்ந்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பன்னீர் செல்வம் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக் பபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாயகியாக நடிக்க லட்சுமி மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

படப்பிடிப்புக்கான திகதி  முடிவானதும் லட்சுமி மேனன் இப்படத்தில் ஒப்பந்தம் செய்வார் என கூறப்படுகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகியிருக்கிறார்.