மீண்டும் ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத, ரயில் தொழிற்சங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒருவாரகாலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
தமது சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதாக அமைச்சரவை உப குழு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாகப் ரயில் தொழிற்சங்கம் நேற்று அறிவித்தது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]