மீண்டும் பிரபுதேவாவோடு இணையும் நயன் – அதிர்ச்சியில் விக்னேஷ்??

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் நயன்தாரா. திரைப்படங்களில் அவர் காதல் காட்சிகள் பேசப்பட்டதை விட, நிஜ வாழ்க்கையில் அவருடைய காதல்கள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன.

சிம்பு, பிரபுதேவா இருவரையும் மிகத் தீவிரமாகக் காதலித்து அவர்களை விட்டுப் பிரிந்தவர் நயன்தாரா. அதன்பின் அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்று வழக்கம் போல வதந்தி பரவியது. அதன் பின் அதுவும் வழக்கம் போல வதந்தியல்ல உண்மைதான் என்று ஊருக்கு உணர்த்தியது.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தன் வருங்காலக் கணவர் என அவரது பேச்சில் குறிப்பிட்டார் நயன்தாரா. அது விக்னேஷ் சிவனைத்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்போது மேடையில் பேசிய நயன்தாரா, என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருக்கு நன்றி, பின் என்னுடைய காதலனுக்கும் நன்றி என விருது மேடையில் பேசியுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு வகையான காதல் பிரச்சனைகளில் சிக்கி வந்த நயன்தாரா தற்போதுதான் ஒரு சுமூகமான காதல் வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன் நிலையில் நடிகை நயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இனைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. அப்போது பிரபுதேவா நயன்தாராவிற்கிடையே காதல் உருவாகி, கல்யாணம் வரை சென்றது.ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் கல்யாணம் தடைபட்டது. அதன்பிறகு இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.

இது சாத்தியமா? என்று கேட்டால், சிம்புவைக் காதலித்து பிரிந்த நயன்தாரா பின்னர் அவருடன் இது நம்ம ஆளு படத்தில் நடிக்கவில்லையா? அதே மாதிரி நடிப்பு என்று வருகிற போது நயன்தாரா சொந்த விருப்பு வெறுப்புகளை பார்க்க மாட்டார். அதனால் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.மேலும் பலர் விக்னேஷ் சிவன் இதை ஏற்றுகொள்வாரா என ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]