மீண்டும் பிக்பாஸில் களமிறங்கும் ஓவியா- முழுவிபரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். நடிகர் கமல்ஹாசன் முதன்முதலாக தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியால் பலர் மக்களிடம் பிரபலமும் அடைந்தனர்.பெரும்பாலும் மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இது அமைந்தது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போவது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே வித்தியாசமான பார்வை அதன் மீது திரும்ப வைத்தது. இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சிலருக்கு பயமாக இருக்கும். ஒருவேளை நாம் கலந்துகொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்ற எண்ணம் பிரபலங்களுக்கும் இருக்கிறது.

அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாணை கூறலாம். இவர்களை தாண்டி அந்நிகழ்ச்சியால் மக்களிடம் அதிகம் திட்டுவாங்கியவர்கள் என்றால் ஜுலி, காயத்ரி, நமீதா என இவர்களை கூறலாம்.

தற்போது பிக்பாஸ் 2 சீசனிற்காக நடிகை ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மட்டும் இல்லாமல் நடிகர்களான ஆர்யா, ஜெயம் ரவி போன்றோர்களிடமும் பிக்பாஸ் குழு பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.இதனுடைய முக்கிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]