மீண்டும் பாராளுமன்றம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இன்றைய பாராளுமன்ற அமர்வு காலை 10 .30 மணிக்கு ஆரம்பமாகிய போது பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு வெளியாகியது.

இதன் அடிப்படையில் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 5 பேர் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 பேர் தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஒருவர் மற்றும் ஜேவிபி சார்பில் ஒருவர் பாராளுமன்றில் தெரிவு குழு சார்பில் இடம்பிடித்தனர்.

இதன் போது சபாநயாகரின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தினேஷ் குணவர்த்தன கூறியபோது சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வையுங்கள் என அனுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்தார்.

மேலும் இந்த முடிவு தொடர்பில் இலத்திரனியல் வாக்கெடுப்புக்கு செல்ல சபாநாயகர் தீர்மானித்தார். இந்த வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்கள் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வாக்களித்த உறுப்பினர்கள் விபரம் :

மீண்டும்

மீண்டும்

வாக்களித்த 5 பேரின் இலத்திரனியல் சாதனம் இயங்காத காரணத்தால் பெயர் குறிப்பிட்டு வாக்கினை பதிவு செய்தனர்.

எனினும் இந்த வாக்கெடுப்பில் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கு பெறாமல் வெளிநடப்பு செய்தனர்.

இதன் மூலம் முதல் முறையாக அமைதியான முறையில் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

வெளிநடப்பு செய்த சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது செய்தியாளர் சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறிய நிமால் சிறி பால டி சில்வா, நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பு, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கானது இல்லை என கூறியுள்ளார்.

எனினும் மஹிந்த அரசு மீது அவநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இதே அளவு வாக்குகள் ரணில் தரப்புக்கு கிடைக்கும் என்பது வெளிப்படை உண்மை.

மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]