முகப்பு News Local News மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் மகிந்த

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் மகிந்த

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது, எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட முடியும் என்றும், அதில் எவ்வித சட்ட சிக்கலும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் படி ஒருவர் மூன்றாவது முறையாக அரச தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனினும் இரண்டு தவணைகளில் அரச தலைவர்களாக பதவி வகித்த முன்னாள் அரச தலைவர்களுக்கு இந்த முறைமை பொருந்தாது. எனவே விருப்பமிருந்தால் சட்ட அடிப்படையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் உயர்நீதிமன்றமே இந்த விடயத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com